பணிக்குச் சென்ற இளம்பெண்ணை கடத்தி இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தஞ்சை அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த இளம்பெண் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் தன் பணியை முடித்துவிட்டு புதிய பேருந்து நிலையத்தில் தனது ஊருக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அந்த பெண்ணின் ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தானும் ஊருக்கு செல்வதாக சொல்லி அவருடைய இரு சக்கர வாகனத்தில் அந்த பெண்ணை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.



போகும் வழியில் வீட்டுக்கு செல்லாமல் அந்த இளைஞர் அந்த பெண்ணை ஏதோ ஒரு காட்டு பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் எங்கே செல்கிறாய் என்று கேட்டபோது  வலுக்கட்டாயமாக அவரை அடித்து வாயை பொத்தி தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் அங்கு வந்த மேலும் மூன்று இளைஞர்கள் அந்தப் பெண்ணின் கையையும் காலையும் கட்டி ஒரு காட்டுக்குள் கொண்டு சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.



மேலும் படிக்க | குன்னூரில் அதிர்ச்சி சம்பவம்; 12 - ம் வகுப்பு மாணவிக்கு கத்தி குத்து


பின்னர் அந்த இளைஞர்கள் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். மிரட்டலுக்கு பயந்த அந்த பெண்ணும் யாரிடமும் சொல்லாமல் கடந்த பத்து நாட்களாக மன வேதனையில் இருந்துள்ளார்.


 பெண்ணின் சோகத்தையும் வருத்தத்தையும் பார்த்து சந்தேகமடைந்த உறவினர்கள் அந்தப் பெண்ணிடம் துருவித் துருவி விசாரணை செய்தபோது அந்தப் பெண் உறவினர் ஒருவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.


இதனையடுத்து நடந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் வட்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.


 புகாரின்பேரில் மேட்டுப்பட்டி சேர்ந்த தமிழரசன், கண்ணன், கொடியரசன், சுகுமாரன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணிக்குச் சென்ற பெண்ணை கடத்தி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


மேலும் படிக்க | சடலத்துடன் செல்பி: சென்னையை உலுக்கிய கொடூர கொலை! பின்னணி என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR