ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவன மேலாளரை முன்னாள் ஊழியர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருமங்கலம் ரவுண்டு பில்டிங் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஒரு வருடமாக அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் செயல்பட்டுவரும் swiggy instamart நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இதே நிறுவனத்தில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஏஜஸ் ஆகிய இருவரும் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் நிறுவனத்திற்கு தெரியாமல் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கிலிருந்து சில பொருட்கள் திருடுபட்டுள்ளது.
இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை நிர்வாகம் ஆய்வு செய்து அதில் மேற்கண்ட இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து இருவரையும்
நிறுவனத்தின் சார்பில் பணிநீக்கம் செய்து ஊதியத்தை பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் மேலாளரான புகழேந்தியை இருவரும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிடித்தம் செய்த ஊதியத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு நிறுவனத்தின் மேலாளர் புகழேந்தி மறுப்பு தெரிவித்து ‘என்னால் ஒன்றும் செய்ய முடியாது’ எனவும் ‘நீங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசுங்கள்’ எனவும் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | சென்னை அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
இதனால் கோபமடைந்த ஏஜஸ், ஹரிஷ் ஆகியோர் மேலாளரை பழிவாங்கும் நோக்கத்தில் காத்திருந்துள்ளனர்.
நேற்று வழக்கம்போல் இரவு பணிக்காக உதவி மேலாளர் புகழேந்தியை நிறுவனத்திற்கு வந்ததை அறிந்து கொண்ட இரண்டு பேரும் பாதுகாப்பு பணியிலிருந்த காவலாளியின் கவனத்தை திசை திருப்பி உள்ளே சென்று மேலாளர் புகழேந்தியை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தாக்குதலில் காயமடைந்த மேலாளர் புகழேந்தி வலி தாங்காமல் அலறி உள்ளார். அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் புகழேந்திக்கு கை விரல் உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
பின்னர் புகழேந்தி அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலு படிக்க | ஓபிஎஸ் தான் ஜல்லிக்கட்டு நாயகர்: விளக்கம் அளிக்கும் முன்னாள் முதலமைச்சர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR