Minister Anbil Mahesh Hospitalized: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடல் நலக்குறைவால் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட முதல்கட்ட சிகிச்சைக்கு பின் கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகள் ரத்து செய்துவிட்டு அவர் பெங்களூரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (ஆக. 12) காலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,  நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு பள்ளிகள் செயல்பட அனுமதி, புதுப்பித்து ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனியார் பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார். 


இதனை அடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும்போது திடீரென நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டதாக கூறி, கார் ஓட்டுனரை அருகே உள்ள மருத்துவமனைக்கு செல்லும்படி தெரிவித்துள்ளார். காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 



மேலும் படிக்க | 'தமிழ்நாட்டுக்கு நீட் வேண்டாம், மசோதாவுல கையெழுத்து எப்ப போடுவீங்க' ஆளுநரிடம் நேருக்கு நேர் வாக்குவாதம்


தொடர்ந்து முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு தனியார் மருத்துவமனையிலேயே அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுமார் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்தார். இதில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு லேசான வயிற்று வலி, அதாவது கியாஸ்டிக் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 


மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த,  அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கரன், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், திமுக மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் திமுகவினர் மருத்துவமனைக்கு வந்தனர். 



தொடர்ந்து உடல்நிலை சீரானதும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். மருத்துவரின் பரிந்துரையின்படி அவர் பெங்களூருவில் உள்ள நாராயணா இருதாலயா மருத்துவமனைக்கு ஆஞ்சியோ சிகிச்சைக்காக காரில் சென்றார். அவருடன் மற்ற இரு அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிககள் உடன் சென்றனர். 



தற்போது அமைச்சர் அன்பில் மகேஸ் குறித்து அவரின் உதவியாளர் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,"அன்பில் அண்ணன் நலம் , தற்போது காரில் தன் பயணத்தை தொடர்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.


மருத்துவ பரிசோதனை


தற்போது, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ஆஞ்சியோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் ரத்தக்குழாய்களில் அடைப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்று இரவு மருத்துவமனையிலேயே இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | நாங்குநேரி சம்பவம்: நேரில் சென்று ஆறுதல் சொன்ன எம்.எல்.ஏ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ