திருச்சியில் அதிர்ச்சி!! 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயை பரப்பிய துரையூர் வாலிபர்
13 நாட்களுக்குள் இரண்டு கிராமங்களில் கொரோனா தொற்று பாதிப்பு 10 மடங்கு அதிகரித்துள்ளது. ஜூன் 22 நிலவரப்படி, 10 கொரோனா பாதிப்பு இருந்தன.ஆனால் அந்த எண்ணிக்கை 108 ஐ எட்டியுள்ளன.
சென்னை: கொரோனா வைரஸ் (Coronavirus) நோயை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், ஒரு நபரால் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த செய்தி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியில் (Tiruchirappalli) உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் (என்.எஸ்.பி சாலை) அமைந்துள்ள நகைக் கடையில் பணிபுரிந்து வந்த ஒரு ஊழியருக்கு ஜூன் 22 அன்று கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கடையில் பணிபுரியும் மீதமுள்ள 303 ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டனர். அதில் மேலும்104 பேருக்கு கொரோனா தொற்று (COVID-19) இருப்பது உறுதி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இவர்கள் அனைவரும் துரையூர் (Thuraiyur) தாலுகா கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிற செய்திகள் | தஞ்சையில் பெண் மருத்துவரை பலிவாங்கிய கொரோனா
பிற செய்திகள் | சாத்தான்குளம் இரட்டை கொலையில் பச்சைப்பொய் சொன்ன CM பதவி விலகவேண்டும்!
இந்த 13 நாட்களுக்குள் இரண்டு கிராமங்களில் கொரோனா தொற்று பாதிப்பு 10 மடங்கு அதிகரித்துள்ளது. ஜூன் 22 நிலவரப்படி, 10 கொரோனா பாதிப்பு இருந்தன.ஆனால் அந்த எண்ணிக்கை 108 ஐ எட்டியுள்ளன. அதில் நான்கு பேருக்கு நெகடிவ் (Corona Negative) வந்துள்ளது. இருப்பினும், முதல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட போதே, அவர்களுடன் தொடர்புடைய குழுவினர்களை தனிமைப் படுத்ப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
அதன்பிறகு மாவட்ட நிர்வாகம், என்.எஸ்.பி சாலையில் மீதமுள்ள கடைகளை இரண்டு வாரங்களுக்கு மூட உத்தரவிட்டு, இப்பகுதியை ஒரு ஹாட்ஸ்பாட் (Hotspots) என்று அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 22,252 கொரோனா நேர்மறை பாதிப்பு பதிவாகியுள்ள. மொத்த கொரோனா (New Coronavirus cases in Tamil Nadu) பாதிப்பு எண்ணிக்கை 7,19,665 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.