டாஸ்மாக்கின் கள்ளச்சந்தையில் குடித்து இருவர் பலி... மதுவில் சயனைட் கலப்பு - கொலையா தற்கொலையா?
Thanjavur TASMAC Death: தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடை திறக்கும் முன்னரே விற்கப்பட்ட மதுவை அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவத்தில் தற்போது, அதிர்ச்சியளிக்கும் விதமான தகவல் வெளியாகியுள்ளது.
Thanjavur TASMAC Death: தஞ்சை அரசு மதுபான கடையில் விற்பனை நேரத்திற்கு முன்னதாக கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதை வாங்கி குடித்து இரண்டு பேர் வாயில் நுரை தள்ளி, அவர்களுக்கு வலிப்பு வந்த நிலையில், அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
டாஸ்மாக் பாரில் சோதனை நடத்த வந்த டாஸ்மாக் உதவி மேலாளரை பொதுமக்கள் தாக்கி பாருக்குள் தள்ளி சிறை வைத்தனர். இந்நிலையில், தற்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிராந்தி அருந்திய இருவர் பலி
தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் குப்புசாமி மற்றும் விவேக். இவர்கள் மீன் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர் தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் 81 23 டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது டாஸ்மாக் கடையை ஒட்டி அனுமதி பெற்ற பார் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில், இன்று (மே 21) காலை டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்திற்கு முன்பாக, அதவாது நண்பகல் 12 மணிக்கு முன் பாரில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. Black pearl என்கிற பிராந்தியை, குப்புசாமியும் விவேக்கும் வாங்கி அருந்தி உள்ளனர்.
மேலும் படிக்க | மதுபான கடைகளில் 40% போலி மதுபானங்கள் தான் விற்பனை - கே.பி.ராமலிங்கம்!
பெட்டிகளை மறைத்த பார் நிர்வாகிகள்?
அவர் பிராந்தியை அருந்திய சில நிமிடங்களில் இருவருக்கும் வாயில் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் குப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் விவேக் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி விவேக்கும் உயிர் இழந்தார். இந்த சம்பவம் கேள்விப்பட்ட உடன் பார் உரிமையாளர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்த மது பாட்டில்கள் அடங்கிய பெட்டியை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றதாக கூறப்பட்டது.
அதிகாரிகள் சிறைவைப்பு
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும் டாஸ்மாக் உதவி மேலாளரும் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் டாஸ்மாக் உதவி மேலாளர் தங்க.பிரபாகரனை தாக்கி பாருக்குள் தள்ளி சிறைபிடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை
இந்நிலையில், போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்ட விசாரணையில் குப்புசாமி, விவேக் ஆகிய இருவரும் அருந்திய மதுவில் சயனைட் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரின் உடலையும் உடற்கூராய்வு மேற்கொண்டதில் சயனைட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர் சந்தித்தனர். இருவர் உயிரிழப்புக்கு காரணமான மதுவில் சயனைடு இருப்பது தெரிய வந்துள்ளது என்றும், தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் சயனைடு உள்ளது உறுதியாகியுள்ளது எனவும் ஆட்சியர் கருத்து தெரிவித்துள்ளார். தற்கொலை அல்லது கொலையாக இருக்க வாய்ப்பு என கருதுகிறோம் என்றும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் சம்பவம்
சயனைட் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை யாரெனும் கொல்ல சதி திட்டம் தீட்டினார்களா அல்லது தற்கொலை முயற்சியா என்பதும் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில், இரு மாவட்டங்களின் அதிகாரிகள் பணி இடமாற்றமும், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. zeenews.india.com/tamil/videos/villupuram-sp-srinadha-suspended-regarding-illicit-liquor-issue-444486
மேலும் படிக்க | பாஜக தலைவர் அண்ணாமலை மிகவும் கைராசிக்காரர் - அமைச்சர் மா.சுப்ரமணியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ