பள்ளி மாணவன் மீது பள்ளி வேன் மோதியதில் மாணவன் பரிதாபமாக பலி
வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது பள்ளி வேன் மோதியதில் சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது பள்ளி வேன் மோதியதில் சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் அருகே ஆழ்வார் திருநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் பள்ளி வளாகத்தில் அதே பள்ளியில் பயிலும் 2 ஆம் வகுப்பு மாணவன் 7 வயது தீஷன்த் என்ற சிறுவன் மீது பள்ளி வாகனம் மோதியது.
அந்த பள்ளியின் வாகனம் ரிவர்ஸ் எடுக்கும்போது சிறுவன் மீது ஏறி இறங்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவனின் உடல் வடபழனி தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்வப்பட்டது. சம்பவம் தொடர்பாக பூங்காவனம் என்ற ஓட்டுநரை கைது செய்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை...வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி
இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுவன் மீது அதே பள்ளி வாகனம் ஏறி இறங்கியதில் பள்ளி மாணவர்களும் பெற்றோரும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெற்றோர்கள் அச்சத்தில் பள்ளியின் முன் கூடி தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை கல்வி கற்கவும் உலக வாழ்வை பற்றி தெரிந்துகொள்ளவும் அனுப்புகிறார்கள். பள்ளியின் மீதும், பள்ளி ஆசிரியர்கள் மீதும் இருக்கும் நம்பிக்கையினால், பெற்றொர் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு கவலையின்றி அனுப்புகிறார்கள். அங்கு சிலரது மெத்தனத்தினாலும், அஜாக்கிரதையாலும் குழந்தைகளின் உயிரே போனால், அது பெற்றோருக்கு ஏற்படுத்தும் சோகத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
மேலும் படிக்க | ஸ்டாலினை கேள்விகேட்ட இபிஎஸ்: பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR