திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியின் பேருந்து நேற்று மாலை வழக்கம் போல பள்ளி முடிந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் பொன்னாபுரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பேருந்தின் பின் பக்க சக்கரங்கள் இரண்டும் சாலையில் கழன்று ஓடிய நிலையில் சக்கரம் இல்லாமல் பள்ளிப்பேருந்து சுமார் 200 மீட்டர் தரையில் உரசியபடி ஓடி நின்றது. இந்த விபத்தின் போது பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


மேலும் படிக்க | Florida: சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்! 


மாணவர்களிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மாணவர்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சென்னை தாம்பரத்தில் சில வருடங்களுக்கு முன்பு பள்ளிப்பேருந்து விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் பள்ளிகளில் மாணவர்களை அழைத்துவரக்கூடிய வாகனங்கள் வருடம் 1 முறை போக்குவரத்து அதிகாரிகளின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ் பெறவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. 


பின்பு மாணவர்களின் பாதுகாப்பை கருதி 6 மாதங்களுக்கு ஒரு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ் பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில் இந்த சான்றிதழ் பெரும் முறை செயல்படாமல் இருந்தது. தற்போது பள்ளிகள் அனைத்தும் தற்போது வழக்கம் போல் இயங்க துவங்கி இருக்கின்ற நிலையில் முன்பு போல மாணவர்களை அழைத்து வரக்கூடிய பள்ளி வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தப்பட தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



மேலும் இது போன்ற சோதனையின் போது சில போக்குவராது துறை அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு இது போன்ற பழுத்துள்ள வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்குவதையும் கண்காணித்து தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR