மதுரை திருமலை நாயக்கர் மகாலில் குறும்படங்கள், போட்டோ சூட் எடுக்க நிரந்தர தடை: ASI
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் குறும்படங்கள் மற்றும் போட்டோ சூட் எடுக்க நிரந்தர தடை விதித்து மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்க கூடிய மதுரை திருமலை நாயக்கர் மஹால் 300 ஆண்டுகள் பழமையானது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதியானது மிகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கக்கூடியது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரைப்படங்களுக்கான ஷூட்டிங் நடைபெறும் பொழுது நூற்றாண்டு பழமையான மஹாலின் சுவர்கள் மற்றும் தூண்கள் சேதம் அடைவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு முதல் திரைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குறும்படம் ஒன்று திருமலை நாயக்கர் மஹால் உட்பகுதியில் எந்த ஒரு அனுமதி இன்றி எடுக்கப்பட்டதாகவும் மேலும் அந்த படத்தில் துப்பாக்கிகள் பயன்படுத்துவது போன்ற காட்சிகளும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி பபயன்படுத்தி பொதுவெளியில் எடுக்கப்படுவது தொடர்பாக புகார் எழுந்தது.
எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், துப்பாக்கி பபயன்படுத்தி பொதுவெளியில் எடுக்கப்பட்ட இந்த குறும்படத்திற்கு எப்படி தொல்லியல் துறை அனுமதி வழங்கியது என்ற கேள்வி எழுந்துள்ளது.மேலும் திருமலை நாயக்கர் மஹால் எடுக்கப்பட்ட அந்த குறும்படத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்கள் திருமணம் மற்றும் பிறந்தநாள் தொடர்பான போட்டோ சூட்சுகள் எடுப்பதற்கு நிரந்தரமாக தடை விதிப்பதாகவும் மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!