மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே பேரணி நடைபெற்றது, அரசியலுக்காக பேரணி நடக்கவில்லை என மு.க.அழகிரி தெரிவித்தார்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த திமுக தலைவர் மறைவுக்கு பின் மதுரையில் தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி, சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5 ஆம் தேதி (இன்று) அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அதில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்திருந்தார்.


இந்நிலையில், கருணாநிதி நினைவிடத்தை நோக்கி தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று காலை அமைதி பேரணியை தொடங்கினார். அந்த அமைதி பேரணியில், அவரது மகன் தயாநிதி அழகிரி, மகள் கயல்விழி மற்றும் ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் கலந்து கொண்டனர். திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து தொடங்கிய பேரணி, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை நடைபெற்றது. தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்துக்கு அழகிரி உள்ளிட்ட அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 



பேரணிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி பேசியபோது.., "பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே பேரணி நடைபெற்றது. வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல. பேரணியில் கலந்துகொண்ட அனைத்து தொண்டர்களுக்கும், ஒத்துழைப்பு அளித்த காவல்துறை, ஊடகங்களுக்கும் நன்றி" என தெரிவித்தார்.