தமிழகத்தில் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடகிழக்கு பருவ காற்றின் சாதக போக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரபிக்கடலில் தீவிர புயலாக உள்ள மஹா, குஜராத் பகுதியிலிருந்து தென்மேற்கே 540 கிலோமீட்டர் தொலைவிலும், டையூவில்  இருந்து தென்மேற்கே  550 கிலோ மீட்டர் தொலைவிலும்  நிலைகொண்டுள்ளது. மஹா புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை. அதேசமயம் மஹா புயல் நிலைகொண்டுள்ள அரபிக்கடல் பகுதிக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும் மஹா புயலால், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.