தேமுதிக தலைவர் விஜயகாந்தை மனைவி பிரேமலதாவின் கருத்து குறித்து வைகோ விளக்கம் அளித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து சில தினங்களுக்கு முன்பு வைகோ அவர்கள் பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது:-  தமிழக சட்டசபை க்கு மே மாதம் தேர்தல் நடந்தபோது மக்கள் நலக்கூட்டணி சார்பில் யாரையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் திமுக -விடம் கூட்டணி அமைக்காமல் எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்ததால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம் என்று கூறினார். எங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறி விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தவறுதான் என்றும் கூறியிருந்தார்.


இந்த நிலையில் பிரேமலதாவிடம் வைகோவின் கருத்து குறித்து கேட்க போது அவர் கூறியதாவது:- வைகோ தினமும் ஒரு கருத்தை கூறுவார். தினமும் உணர்ச்சிவசப்படக் கூடியவர். அவர் சொல்லும் கருத்துகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேமுதிக -வுடன் கூட்டணி வேண்டும் என்று அவர்தான் தேடி வந்தார். இப்போது விமர்சனம் செய்கிறார். இதற்கு அவர்தான் பதில் சொல்லவேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த நிலையில் வைகோவிடம், பிரேமலதா பதில் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த வைகோ, கால சூழ்நிலைக்காக அப்படி ஒரு முடிவு எடுக்க ப்பட்டது என்றும் நான் கூறியிருந்தேன். அதனை யாரும் பெரிதாக போடவில்லை. தவறாக சொல்லிவிட்டார்கள். சகோதரி பிரேமலதாவின் பேட்டியை பத்திரிகை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் அறிந்தேன். திமுக கூட்டணியில் பணமும், அதிக தொகுதிகளையும் தருவதாக கூறியும் அங்கு செல்லாமல் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்த விஜயகாந்த் மனதை நான் பாராட்டுகிறேன். நான் சொன்னது தவறுதான் என்று கூறினார்.


மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி நான் கூறிய கருத்தை சகோதரி பிரேமலதா அவர்கள் தவறாக புரிந்து கொண்டதாக கூறினார். என்னுடைய பேட்டியில் நான் கூறிய கருத்தை பிரேமலதா சரியாக புரிந்து கொண்டிருந்தால் அவர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.