சிவகாசி செய்திகள்: சிவகாசி அருகே எம். புதுப்பட்டியை அடுத்த  ரெங்கபாளையம் என்ற இடத்தில் சுந்தர மூர்த்தி (வயது 43) என்பவருக்கு சொந்தமான கனிஷ்கர் என்ற தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில், இதுவரை பலி ஆனவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.


முன்னதாக பாக்கியம் (35), மகாதேவி (50), பஞ்சவர்ணம் (35), பாலமுருகன் (30), தமிழ்ச்செல்வி (55), முனீஸ்வரி (32), தங்கமலை (33), அனிதா (40), குருவம்மாள் (55) ஆகிய 9 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாயினர். 



70 சதவிகித தீக்காயங்களுடன் இரண்டு பெண் தொழிலாளர்கள் உட்பட மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்ட தீயணைப்பு துறையினர் அவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 


மேலும் படிக்க - தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று வீட்டிற்குள் புகுந்து விபத்து: 12 பேர் காயம்


இந்த பட்டாசு வெடி விபத்து குறித்து அறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் மூன்று வாகனங்களில் வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி இடிபாடிகளை அகற்றி இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். அதேபோல விபத்து குறித்து அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், தீபாவளிக்காக தயாரித்த பட்டாசுகளை பரிசோதனை செய்து பார்த்த போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும், பட்டாசு இருப்பு அறையில் நெருப்பு அவை  வெடித்து சிதறியிருக்கலாம் என தெரிவித்தனர். 


விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தனர். விபத்து தொடர்பாக எம் புதுப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இம்பெரும் விபத்தை ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக கிச்சநாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான ஆர்யா என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் வேம்பு என்ற தொழிலாளர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.


சிவகாசியில் ஒரே நாளில் இரு வேறு பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் மற்றும் பல ஏழை தொழிலாளர்கள் உயிரிழந்ததால் அப்பகுதி மக்களுடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க - இனி ரேஷன் பொருட்கள் வாங்க புதிய நடைமுறை - தமிழக அரசு அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ