சென்னையில் சிறுமி வன்கொடுமை: ஆக.,10 வரை நீதிமன்ற காவல்!
சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு ஆகஸ்ட் 10 வரை நீதிமன்ற காவல்!!
சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு ஆகஸ்ட் 10 வரை நீதிமன்ற காவல்!!
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அவரது 11 வயது மகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யபட்ட 17 போரையும் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா ஜூலை 31 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் வைக்கயும் உத்தரவிட்டனர்.
இன்றுடன் 5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 17 போரையும் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 போரையும் மேலும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவு!