கோயம்புத்தூர்: இன்று கோயம்புத்தூரின் புறநகரில் உள்ள ஒரு வீட்டில் கண்ணாடிவிரியன் பாம்பு பிடிபட்டது அந்த வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூரின் புறநகரான கோவில்மேடு பகுதியில் வசிக்கும் ஒருவர், வெள்ளிக்கிழமையன்று தனது வீட்டின் குளியலறையில் பெரிய பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  உடனே அவர் துரிதமாக செயல்பட்டு, ஒரு தனியார் பாம்பு பிடிப்பவரை அழைத்து பாம்பை பிடிக்கச் செய்தார்.  பிடிபட்ட பாம்பு, அதிக நஞ்சு கொண்ட கண்ணாடிவிரியன் வகையைச் சார்ந்தது என்று அடையாளம் காணப்பட்டது.  பாம்பை வீட்டின் குளியறையில் இருந்து பிடித்து, ஆனைக்கட்டி வனப் பகுதிக்குள் விடப்பட்ட காலகட்டத்திற்குள், அந்தப் பாம்பு 35 குட்டிகளை பெற்றெடுத்தது.  இந்த தகவலை அறிந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இந்தியாவில் 276 வகையான பாம்புகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகைகளில் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டை விரியன் என நான்கு வகை பாம்புகளுக்கு மட்டுமே நஞ்சு உண்டு, பிற வகை பாம்புகளுக்கு விஷம் இல்லை.


Also Read | சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் குறைந்துள்ளது


வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதியோ உரிமமோ இல்லாமல் பாம்புகளை பிடிப்பதும், கொல்வதும், ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லவும் முடியாது.  மீறினால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.


பாம்புகள் மிகவும் விலை மதிப்பு மிக்கவை. பாம்பின் நஞ்சானது மருத்துவத் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கிராம் கண்ணாடிவிரியன் நஞ்சின் விலை 40 ஆயிரம் ரூபாய் என்பதில் இருந்து பாம்பின் நஞ்சின் மதிப்பைப் புரிந்துக் கொள்ளலாம். , சுருட்டை விரியன் 45 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன.


Also Read | புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்


பாம்புகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை.  ஆனால் குட்டிப்போடும் பாம்புகளின் வகையில் ஆனால், கண்ணாடிவிரியனும் ஒன்று.   விரியன் வகைப் பாம்பின் நச்சு ரத்தத்தை சிதைக்கும் தன்மை கொண்டவை. எனவே, விரியன் பாம்பு கடித்தால், சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்கள் ரத்தம் உறையும் நேரம் மற்றும் எவ்வளவு நேரம் ரத்தம் பெருகுகிறது என்பதை அடிக்கடி பரிசோதனை செய்து பார்ப்பார்கள்.


மிகவும் நச்சு கொண்ட கண்ணாடிவிரியன் பாம்பை வீட்டில் கண்டதும் அந்த வீட்டில் குடியிருந்தவர்களின் அச்சம் அளவு கடந்து போனதற்கு காரணம் இதுபோதாதா?  அதுவும் ஒன்றல்ல, ஒரு கூட்டத்தையே ஈன்றெடுத்துள்ளது மனிதனின் வீட்டிற்குள் மறைந்திருந்து குட்டிப்போட முயன்ற கண்ணாடிவிரியன் பாம்பு…