ரெம்டெசிவிர் மருந்தை வாங்க சென்னையில் அலை மோதும் மக்கள் கூட்டம்!
கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. அதனால், அந்த மருத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. அதனால், அந்த மருத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
முன்னதாக, கீழ்பாக்கம் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து விற்கப்பட்டு வந்தது. மருத்துவக் கல்லூரியில் உள்ள இடநெருக்கடி காரணமாக அங்கே நெரிசல் அதிகம் ஏற்பட்டதால், ரெம்டெசிவிர் விற்பனை மையத்தை, கீழ்பாகத்தில்ல் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு மாற்றியது தமிழக அரசு. சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (15.05.2021) அதன் விற்பனை தொடங்கிய நிலையில், தமிழக அரசு துவக்கிய நிலையில், அதனை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதில் பலருக்கு மருந்து கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
ALSO READ | அதி தீவிர புயலாகிறது டவ் தே, 5 நாட்களுக்கு கன மழை: எச்சரிக்கும் IMD
தமிழகத்தில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவால், பல இடங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கொரோனாவால் கடுமையாக தாக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து போடப்படும் நிலையில், அந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் இல்லை என்பதால் அவர்கள் நோயாளிகளின் உறவினர்களிடம் வாங்கி வரச் சொல்கின்றனர். மருத்துவரின் மருந்து சீட்டை பெற்றுக் கொண்டு நோயாளிகளின் உறவினர்கள், ரெம்டெசிவிர் மருந்தை வாங்க, ஆயிரக்கணக்கானோர் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் குவிந்தனர்.
ஒருநாளைக்கு 300 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டம் அலைமோதியது. அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளி என்பது சிறிதும் இல்லை. மக்களின் கூட்டம் அலைமோதியதால் தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டன. அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறினர்.
இதற்கிடையில், ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதை அடுத்து கள்ளச்சந்தையில் மருந்து விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ALSO READ | நாளை ஞாயிறு முழு ஊரடங்கு: ரேஷன் கடைகளில் ரூ.2000 நிவாரண நிதி கிடைக்குமா? கிடைக்காதா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR