ராமானுஜர் காலத்திலேயே சமூகநீதி இருந்தது; ராமசாமிக்கு மட்டும் பெருமை இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்
ராமானுஜர் காலத்திலேயே சமூகநீதி பேசப்பட்டது. ஒரு ராமசாமிக்கு மட்டும் அதற்கான பெருமை கிடையாதென்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சர்வதேச சகோதரத்துவ தினத்தையொட்டி சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,, "ராமானுஜர் காலத்தில் இருந்தே சமூக நீதி பேசப்பட்டு வருகிறது. என்னைப் பொருத்தமட்டில், ஒரு ராமசாமிக்கு மட்டும் அதற்கான முழுப்பெருமையும் கிடையாது. பல ராமசாமிகள் சமூக நீதிக்காக போராடி இருக்கிறார்கள். ஒரு 30-35 ஆண்டுகளுக்குப் பின்னர், தேசிய கல்விக் கொள்கை என்று ஒரு இரண்டு லட்சம், மூன்று லட்சம் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டு, பல லட்சம் மக்களிடம் கருத்துக் கேட்டு, சும்மா ஒன்றும் கொண்டுவரவில்லை.
எனவே அதனை உண்மையாக தெரிந்துகொண்டு, அந்த புதிய கல்விக் கொள்கையை நாம் முன்னெடுத்துச் சென்றால் என்ன? தேசியம் என்ற வார்த்தை வந்ததால் தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம் எனக்கூறுவது சரி கிடையாது.
மேலும் படிக்க | மதுபோதையால் விபத்து - அரசு பேருந்தின் மீது மோதிய ஷேர் ஆட்டோ... சிகிச்சையில் ஓட்டுநர்
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கிடைக்கின்ற கல்வி அரசுப் பள்ளிகளில் முழுமையாக கிடைக்கிறதா? அனைத்து அரசியல்வாதிகளின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கின்றனரா” என கேள்வி எழுப்பினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ