மதுபோதையால் விபத்து - அரசு பேருந்தின் மீது மோதிய ஷேர் ஆட்டோ... சிகிச்சையில் ஓட்டுநர்

தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னால் சேர் ஆட்டோ மோதியதில்,படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 11, 2022, 05:08 PM IST
  • மதுபோதையில் இருந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர்
  • சம்பவ இடத்தில் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஆய்வு
மதுபோதையால் விபத்து - அரசு பேருந்தின் மீது மோதிய ஷேர் ஆட்டோ... சிகிச்சையில் ஓட்டுநர் title=

சென்னையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையங்களில் ஒன்று தாம்பரம் ரயில் நிலையம். இங்கு, சென்னை புறநகர் ரயில்கள் மட்டுமின்றி, திருச்சி, விழுப்புரம் வழி செல்லும் பல்வேறு ரயில்களும் வந்து செல்கின்றன. அங்கிருந்து அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல  ஷேர் ஆட்டோக்களையும், பேருந்துகளையுமே பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். 

இந்நிலையில், சென்னை தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் தாம்பரத்தில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் அரசு பேருந்து பயணிகளை ஏற்றி கொண்டிருந்தது. அப்போது மூன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற ஷேர் ஆட்டோ ஒன்று, நின்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. 

மேலும் படிக்க | ரவுடிகளுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

இதில், ஆட்டோ ஓட்டுநர் குமாருக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. மேலும், அதிக ரத்தம் வெளியேறியதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கினார். ஷேர் ஆட்டோவில் பயணிந்த மூவரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்,

விபத்தை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பிற ஆட்டோ ஓட்டுனர்கள், உடனடியாக காயமடைந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார், மருத்துவமனைக்கும் சென்று ஓட்டுநர் குமாரையும் பார்த்தனர். 

அப்போது, போலீசார் குமாரிடம் நடத்திய விசாரணையில், அவர் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததே விபத்து காரணம் என்று தெரியவந்தது. விபத்து காரணமாக அந்த பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் படிக்க | சென்னையில் 537 லாட்ஜ், மேன்ஷன்களில் காவல்துறை அதிரடி சிறப்பு சோதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News