Domestic Voilence: மனைவியை அனுப்பாத மாமியாரை கொன்ற மருமகன்
குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாத மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன்.
சென்னை: வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 4வது தெருவைச் சேர்ந்த லதாவை அவரது மருமகன் வெட்டி கொலை செய்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான லதா, பெரியமேட்டில் வீடுகளில், வீட்டு வேலை செய்து வருகிறார். 24 வயது சுதா மற்றும் 3 மகன்களின் தாயான லதாவை அவரது மகளின் கணவரே வெட்டிக் கொன்றுள்ளார்.
மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்த பாலாஜிக்கும், சுதாவுக்கும் ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. பெயிண்டராக வேலை செய்து வருகிறார் பாலாஜி. பாலாஜி -சுதா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே பாலாஜி மற்றும் சுதா இவர்களுக்குள் கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட சண்டையால், கணவர் பாலாஜியிடம் கோபித்துக் கொண்டு, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கே வந்துவிட்டார் சுதா.
மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக, நேற்று மதியம் 3 மணி அளவில் பாலாஜி தனது நண்பர் திவ்யாநாத்துடன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சுதாவிடம் ஏன் என்னை விட்டு பிரிந்து வந்து விட்டாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுதாவின் கையில் வெட்டியுள்ளார். தடுக்க வந்த தனது மாமியார் லதாவையும் சரமாரியாக குத்தி உள்ளார். இதற்கு பாலாஜியின் நண்பர் திவ்யநாத் உடந்தையாக இருந்துள்ளார்.
மருமகனின் தாக்குதலில் லதாவிற்கு இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பெண்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு (Treatment in Hospital) அனுப்பி வைத்தனர்.
சுதா கையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மாமியார் லதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எம்கேபி நகர் போலீசார், பாலாஜி மற்றும் அவரது நண்பர் திவ்யநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Also Read | சிறுமி உடல் கருகி இறப்பு - குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR