ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கீழக்கன்னிசேரி கிராமத்தில் தனது தாயார்  நடத்தையில் ஏற்பட்ட  சந்தேகம் காரணமாக  இரவில் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்த மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாயை கொலை செய்த மகன், தாயின் உடலின் அருகிலே விடிய விடிய காத்திருந்து, விடிந்ததும் காலையில் முதுகுளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி மங்கையர்கரசு. இவர் தற்போது வெளியூரில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி அமுதா. இவருக்கு வயது வயது 42. இவர்களது மூத்த மகன் உதயகுமார். இவருக்கு வயது 26. 


தாய்க்கும் மகனுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. 


இந்த நிலையில், உதயகுமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள், ‘உனது தாயார் அமுதா அக்கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன்  கள்ளத் தொடர்பு கொண்டுள்ளார்’ என கூறியுள்ளனர்.


இதையடுத்து, தாயார் அமுதாவை மகன் உதயகுமார் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது. 


இதையடுத்து, தாயாரின் வயதுக்கு மீறிய தவறான நடத்தையால் ஏற்பட்ட  அவமானத்தால்  ஆத்திரமடைந்த மகன் உதயகுமார் தாயார் அமுதாவை கொல்ல திட்டமிட்டார். சம்பவத்தன்று அமுதா தூங்கிக்கொண்டிருந்தபோது, அவரது கழுத்தை நெரித்து உதயகுமார் கொலை செய்தார். தனது தாய் இறந்ததை உறுதி செய்த உதயகுமார், தாயாரின் உடலின் அருகே இரவு முழுவதும் காத்திருந்துள்ளார். 


மேலும் படிக்க | தமிழக தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி; எதற்கெல்லாம் தளர்வுகள்? முழு விவரம்


பின்னர் காலையில் எழுந்து  முதுகுளத்தூர் காவல் நிலையம் சென்று அங்கு தான் தனது தாயை கொன்றதாகக் கூறி சரணடைந்தார்.


சரணடைந்த அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், தனது தாயார்  வேறொரு ஆணுடன் தகாத உறவு வைத்திருந்ததை  தான் கண்டித்ததாகவும், தான் கண்டித்தும் அவர் கேட்காததால் தான் ஆத்திரமடைந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் விசாரணையின் போது கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


இதையடுத்து, தாயாரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதயகுமார் முதுகுளத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க | பெண்கள் பெட்டியில் ஏறி ஆபாசமாக நடந்துகொண்ட இளைஞர் - துணிச்சலாக எதிர்கொண்ட பெண்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR