போதையில் ரகளை செய்த மகன்; தீவைத்து எரித்த பெற்றோர்- வெளியான சிசிடிவி காட்சி
மதுபோதையில் ரகளை செய்த மகனை அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தீவைத்து எரித்து கொன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதையில் ரகளை செய்த மகனை அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தீவைத்து எரித்து கொன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை வைகை நதி கரையோரப் பகுதியில் சாக்குமூட்டையில் கட்டி எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கரிமேடு காவல்நிலைய காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை தொடங்கினர்.
ALSO READ | சேலத்தில் ’சதுரங்க வேட்டை’.. லட்சக்கணக்கில் மோசடி..
இதுதொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் கிருஷ்ணவேணி தம்பதியர். இவருடைய ஒரே மகன் மணிமாறன் திருமணமாகி மனைவியைப் பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வந்த நிலையில் தினமும் மது அருந்திவிட்டு தாய் தந்தையுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
தினமும் தகராறு செய்ததால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் கிருஷ்ணவேணி இருவரும் மகனை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு சாக்குமூட்டையில் கட்டி தன்னுடைய சைக்கிளில் வைத்துக் கொண்டு வந்து வைகை கரையோரம் போட்டு தீவைத்து கொளுத்தி விட்டு சென்றுள்ளனர்.
சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு முருகேசன் மற்றும் கிருஷ்ணவேணி இருவரையும் கைது செய்து கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | கிரிப்டோ கரன்சி பேரில் மோசடி; பல லட்சம் ரூபாயை இழந்த வாலிபர்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR