கிரிப்டோ கரன்சி பேரில் மோசடி; பல லட்சம் ரூபாயை இழந்த வாலிபர்..!!

ஆன்லைனில் கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி ஜெகன் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் சுமார் 20 லட்ச ரூபாய் வரை பணத்தை பெற்றுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 25, 2022, 03:26 PM IST
கிரிப்டோ கரன்சி பேரில் மோசடி; பல லட்சம் ரூபாயை இழந்த வாலிபர்..!! title=

தூத்துக்குடி நந்தகோபாலா புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் பொன் இசக்கி பாண்டியன்,  இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் சேர்ந்த ஜெகன் ராஜ்  என்ற வாலிபரிடம் ஆன்லைனில் கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும். எனவே பணம் முதலீடு செய் என ஆசைவார்த்தை கூறி ஜெகன் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் சுமார் 20 லட்ச ரூபாய் வரை பணத்தை பெற்றுள்ளார்.

ஜெகன் ராஜ் என்பவர், இதனை மோசடி என்று உணர்ந்த பின் விக்னேஷ் பொன் இசக்கி பாண்டியனை அணுகி தனக்கு பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு விக்னேஷ்  பொன் இசக்கி பாண்டியன் பணத்தை தராமல் போகவே, ஜெகன் ராஜ் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. 

மேலும் விக்னேஷ்  பொன் இசக்கி பாண்டியன் இதேபோல் பலரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது .இதையடுத்து பாதிக்கப்பட்ட ஜெகன் ராஜ் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மோசடியில் ஈடுபட்ட விக்னேஷ் பொன் இசக்கி பாண்டியனை கைது செய்து தனது பணத்தை மீட்டுத் தருமாறு புகார் மனு அளித்தார்.

 தூத்துக்குடியில் கிரிப்டோகரன்சி பெயரில் பணத்தை இரட்டடிப்பு செய்வதாக கூறி பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | தென் இந்தியாவில் அடி எடுத்து வைத்தது Zee Media: 4 மொழிகளில் செய்தி சேனல்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News