சேலம்: சேலத்தில் தந்தையின் மெழுகுசிலை முன்பாக மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் மக்கள் மனங்களில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் குகை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம், புஷ்பராணி தம்பதியருக்கு ஆரோக்கிய இயேசுராஜா என்ற மகனும், ராசிகா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனவால் பாதிக்கப்பட்டு பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன்பாகவே மகள் ராசிகாவுக்கு திருமணம் முடித்துவிட்ட நிலையில் மகனுக்கு விமர்சியாக திருமணம் நடத்த வேண்டும் என்ற ஆசையுடன் அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி உயிரிழந்தார். தனது தந்தை தன் திருமணத்தை விமரிசையாக நடத்த வேண்டும் என ஆசைபட்டு அது நடப்பதற்கு முன்னரே அவர் உயிர் இழந்தது மகன் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. இந்த நிலையில், மகனுக்கும் தந்தை முன்னர் தனது திருமணம் நடக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி இருந்தது. 


மேலும் படிக்க | சசிகலா உடன் சந்திப்பு... ஸ்வீட் எடுத்து கொண்டாடிய வைத்தியலிங்கம்.. இதுதான் காரணம்! 


தனது மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்ற அவர் ஒரு வழியை தேர்ந்தெடுத்தார். தனது தந்தை முன்னிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக பெங்களூருவில் மெழுகுசிலை தயாரிக்கும் நிறுவனத்தில் தந்தையின் உருவ மெழுகு சிலையை தயாரிக்கும் படி கூறினார். தந்தையின் மெழுகு சிலையும் தயாராகி வந்தது. இன்று நடைபெற்ற திருமண விழாவில் தந்தை முன்னிலையில் அவர் திருமணம் செய்து கொண்டார்.



தந்தையின் மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக தந்தையின் மெழுகு சிலையை தயாரித்து தந்தையின் முன்பு திருமணம் செய்து கொண்ட மகனை நினைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.


இதே போன்ற ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய கணவர் செல்வராஜ் (56). கடந்தாண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக செல்வராஜ் உயிரிழந்தார். உயிருடன் இருக்கும் போது மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என செல்வராஜ் திட்டமிட்டிருந்த நிலையில் செல்வராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஷ்வரி தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் இருந்துள்ளார். எனவே தந்தையின் கடைசி ஆசையை நிருவெற்றும் வகையில்,  5 லட்சம் ரூபாய் செலவில் செல்வராஜின் மெழுகு சிலையை தயாரித்து, அதன் முன்னால் மகள் திருமணம் செய்துகொண்டார். 


மேலும் படிக்க | "தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு கட்டணம்" - மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ