சசிகலா உடன் சந்திப்பு... ஸ்வீட் எடுத்து கொண்டாடிய வைத்தியலிங்கம்.. இதுதான் காரணம்!

அதிமுகவில் பல்வேறு சச்சரவுகள் நிலவி வரும் நிலையில், சசிகலா - வைத்தியலிங்கம் ஆகியோரின் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Sudharsan G | Edited by - Shiva Murugesan | Last Updated : Sep 9, 2022, 01:20 PM IST
  • வைத்தியலிங்கத்திற்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சசிகலா.
  • சசிகலாவை நானே நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பேன் -ஓ.பன்னீர்செல்வம்.
  • ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு.
சசிகலா உடன் சந்திப்பு... ஸ்வீட் எடுத்து கொண்டாடிய வைத்தியலிங்கம்.. இதுதான் காரணம்! title=

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே  திருமண நிகழ்வில் கலந்துகொண்ட சசிகலா, அங்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தை சந்தித்தார். அப்போது, வைத்தியலிங்கத்திற்கு இனிப்பு வழங்கிய சசிகலா, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்தார்.

அதிமுகவில் தலைமை தொடர்பான விவகாரம் கடந்த சில மாதங்களாக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இரு தரப்புக்கும் இடையே சட்ட ரீதியாகவும், கள ரீதியாகவும் பல்வேறு சச்சரவுகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் இங்கு பங்கேற்றார். அதே விழாவில், ஒரத்தநாடு எம்எல்ஏவும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்தியலிங்கமும் பங்கேற்றார்.

மேலும் படிக்க: சவாலே சமாளி! நான் ரெடி நீ ரெடியா? பதவியை ராஜினாமா இபிஎஸ் தயாரா? சவால் விடும் ஓபிஎஸ்

sasikala met vaidyalingam

ஒரத்தநாட்டில் சந்திப்பு

அப்போது, அந்த விழாவில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். மேலும், வைத்தியலிங்கம் இன்று அவரது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சசிகலா தனது வாழ்த்தை தெரிவித்தார். அப்போது வைத்தியலிங்கத்திற்கு சசிகலா இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 2011-2016 காலகட்டத்தில் அதிமுக அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம், அப்போதைய அதிகாரமிக்க அமைச்சர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்தார். தொடர்ந்து, 2016இல் ஒரத்தநாட்டில் தோல்வியடைந்த அவர், பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, அதிமுகவின் நலனுக்காக சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனை நானே நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, சசிகலா - வைத்தியலிங்கம் ஆகியோரின் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: துரோகம்.. திமுகவின் பினாமி.. பச்சோந்தியை விட அதிகம் நிறம் மாறுபவர் ஓபிஎஸ் -ஈபிஸ் விமர்சனம்

Vaidyalingam Birthday

ஓபிஎஸ் மேல்முறையீடு

கடந்த ஜீன் 23, ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு பொதுக்குழுவும் அதிமுகவில் பெரும் மாற்றத்தை அளித்தது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, ஜூலை 11ஆம் தேதி தேர்வானார். 

தொடர்ந்து, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து, ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தனிநீதிபதியின் உத்தரவு செல்லாது என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

இதனால், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் எனவும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படலாம் எனவும் தெரவிக்கப்பட்டது. தொடர்ந்து, உயர்நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: திமுகவுடனான உறவை ஓபிஎஸ் பகிரங்கப்படுத்திவிட்டார்: இபிஎஸ் குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News