கேரளாவில் நிவாரண முயற்சிகளுக்கு தங்கள் பங்களிப்பை முழுமையாக கொடுத்துள்ளது தெற்கிந்திய ரயில்வே நிர்வாகம்....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக வரலாறு கன மழை பெய்து வருகிறது. கனமழையின் காரமாக கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால், மின்சாரம், போக்குவரத்து, உணவு, இருப்பிடம் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளிலும் சிக்கி கேரளா தவித்துவருகிறது. 


கேரளாவில் உள்ள 27 அணைகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. சுமார் 26 வருடங்களுக்குப் பிறகு, இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. கேரளாவை வெள்ளம் சூழ்ந்து இரண்டு வாரங்களைக் கடந்துவிட்ட நிலையிலும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. னமழையின் காரணமாக இதுவரை 324-க்கும் மேற்ப்பட்டோர் பலியாகியுள்ளனர் என கேரளா முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 


கேரளாவிற்கு பலரும் பலவகையான நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பசியில் வாடும் மக்களுக்கு உணவுகளை வழங்கிவருகின்றனர். இந்நிலையில், இந்த முயற்சியில் தெற்கு இந்திய ரயில்வே நிவாகம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. கேரள மக்களின் குடிநீர் தேவைக்காக தெற்கு ரயில்வே சார்பில் சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து 2.8 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் திருவனந்தபுரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 


செங்கல்பட்டில் இருந்து 7 வேகன்களிலும், சென்னை தண்டையார் பேட்டை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 15 வேகன்களில் தண்ணீர் அனுப்பப்பட்டுள்ளது. பாட்டில்களில் நிரப்பப்பட்ட ரயில் நீர் 1320 மரப்பெட்டிகள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு ரயில்களில் பாலக்காடு மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.