தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட MGR ஜானகி கல்லூரியில், தேர்தல் நாள் அன்றே எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றிருப்பது பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் ஜூன் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நாசர், விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ், ஐசரி கே.கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலை எதிர்கொள்கின்றன. இதற்காக 2 அணியினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


முன்னதாக நடிகர் சங்க தேர்தல் ஆனது MGR ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட அதே நாளில் (ஜூன் 23) நடிகர் எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தற்போது எஸ்.வி.சேகர் 'அல்வா' நாடகத்தை நடத்த அனுமதி பெற்றுள்ளதால், அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. 


MGR ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதி பெற்ற ரசீதை விஷால் காட்ட வேண்டும். நாடகம் நடத்துவதற்கு நான் முறைப்படி அனுமதி பெற்றுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.