சட்டப்பேரவையில் இருந்து ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ. டிடிவி. தினகரன் வெளிநடப்பு செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டமன்றத்தில் இரண்டாம் நாளான இன்று கேள்வி நேரத்தின்போது ஒக்கி புயல் பாதிப்பு, அரசின் செயல்பாடு, பஸ் தொழிலாளர் போராட்டம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.


பின்னர் அமைச்சர் தங்கமணி பேசும்போது, டிடிவி தினகரன் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்தார்.


இதற்கு பதிலளிக்க வாய்ப்பு அளிக்கும்படி டிடிவி தினகரன் 'சபாநாயகரிடம் கேட்டார். ஆனால், பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன்;- உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் 18 எம்எல்ஏக்களின் தொகுதிகள் காலியானதாக தமிழக அரசு இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டி அரசு என அமைச்சர் தங்கமணி பேசியதற்கு பதில் கூற நான் வாய்ப்பு கேட்டதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார்.  எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து பேச முயன்றபோதும் வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து வெளிநடப்பு செய்தேன் என்றார்.