நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது. நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி அன்று நமது பித்ருக்களை அதாவது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அது தவிர அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில், மறைந்த திதியில், சிரார்த்தம் செய்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆகியவை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாள். இந்த ஆண்டின் ஆடி அமாவாசை வரும் 28ம் தேதி வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள்


அமாவாசை அன்று அனைத்து முன்னோர்களையும் நினைவு கூற வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு, அதாவது கடல் அல்லது ஆறுகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து, அவர்களது ஆசியை பெற தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. இதனால் பித்ரு தோஷம் அனைத்தும் நீங்கி, குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும் என்பது ஐதீகம்.


இந்த நிலையில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வியாழக்கிழமை அன்று சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. 


மதுரை - ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06907) மதுரையிலிருந்து அதிகாலை 05.45 மணிக்கு புறப்பட்டு காலை 09.15 மணிக்கு இராமேஸ்வரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 01.30 மணிக்கு புறப்பட்டு மாலை 05.15 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் கீழ் மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ