சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கணினி வழி குற்றங்களில் சிறந்த முறையில் புலனாய்வு மேற்கொள்ளவும், ஆன்லைன் மூலம் பெறப்படும் சைபர் கிரைம் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைதள குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், "கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி" (Computer Literacy Training Programme) வகுப்புகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின் பேரில், சென்னை பெருநகரில் பணிபுரியும் 1,609 ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு சென்னையில் உள்ள 6 கல்லூரி மையங்களில் கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைத் தொடர்ந்து, இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் மெட்ராஸ் ஐ.ஐ.டி வளாகத்தில் கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து சிறப்பு உரையாற்றினார். இப்பயிற்சி வகுப்பில் அடிப்படை கணினி பயிற்சி, கணிணி வழி குற்றங்களில் புலானய்வு மேற்கொள்வது, தடயங்களை சேகரிப்பது, சேகரித்த தடயங்களை பாதுகாப்பது, சமூக வலைதள குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது, CCTNS வலை தளத்தை கையாள்வது, பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் தயாரிப்பது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பு ஒரு குழுவுக்கு 2 நாட்கள் வீதம் ஒரு மாதத்திற்கு 6 கல்லூரி மையங்களில் இந்த பயிற்சியானது நடத்தப்பட இருக்கிறது.


ALSO READ: OPS on Tamil New Year: தவறான எண்ணத்தில் நிலைத்திருப்பதை விட கருத்தை மாற்றுவது நல்லது 



இந்நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநர் பாஸ்கர்ராமமூர்த்தி, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் லோகநாதன், இணை ஆணையாளர் பிரபாகரன், துணை ஆணையாளர்கள் பாலாஜி சரவணன், திஷாமிட்டல், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.


ALSO READ | ஜெயலலிதா நினைவு இல்ல விவகாரம் - அதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR