செப்டம்பர் 15 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து நீட்டிப்பு: தெற்கு ரயில்வே
தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டதால் தமிழ் நாட்டில் இயங்கி வந்த 7 சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் தடையை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுக்குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு (TN Govt) சார்பில் வலியுறுத்தப்பட்டதால் தமிழ் நாட்டில் இயங்கி வந்த 7 சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் பல மாநிலங்களில் சிக்கித்தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் சொந்த மாநிலத்திற்கு செல்ல நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் ஏழு ரயிகள் தமிழகத்திற்கு இயக்கப்பட்டன.
ALSO READ | ஆகஸ்ட் 31 வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படாது: தெற்கு ரயில்வே
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா (Coronavirus) பாதிப்பு அதிகரித்து வந்ததால், கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக சிறப்பு ரயில்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து ஆகஸ்டு 31 வரை சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் செப்டம்பர் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது.