கொரோனா முழு அடைப்பு காலத்தில், வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் முக-கவசம் அணியவில்லை என்றாலோ, பொதுவெளியில் எச்சில் துப்பினாலோ உடனடி அபராதம் விதிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலத்தில் கொரோனா(Coronavirus) தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி உத்தரவு வெளியாகியுள்ளது. ஆட்சியரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.


READ | கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு...


தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் கடந்த 24.03.2020 முதல் 30.06.2020 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது, பொது இடங்களில் நடமாடும் போதும் உரிய முறையில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. அவ்வாறு முறையாக முக-கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடுபவர்களுக்கு ரூ.100 (முதல் முறை) உடனடி அபராதம் விதிக்கப்படும். இரண்டாம் முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிப்பட்டால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


திருப்பூர்(Tiruppur) மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி கடை, காய்கறி கடைகள், மளிகை கடைகள், காய்கனி விற்பனை செய்பவர்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வணிக நிலையங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் முக-கவசம் அணிவது கட்டாயமாகும். 


READ | Video: கொரோனாவை எதிர்க்க வந்துவிட்டது கிருமிநாசினி சுரங்கப்பாதை...


தனி நபர் இடைவெளியை கடைப்பிடித்தல், கை கழுவுதல் போன்ற அனைத்து விதமான சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுதலும் அவசியமாகிறது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 


குறிப்பிடப்பட்ட இந்த வழிமுறைகளை மீறும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான அபராதம் மற்றும் பூட்டுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.