தமிழகத்துக்கு நீட் தேர்வில் (NEET Exam) இருந்து விலக்கு அளிக்கக்கோரும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது. இதில், தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்காக அதிமுக மேற்கொண்ட முயற்சிகளை, அதிமுக ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் பட்டியலிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | விமர்சனங்களை எதிர்கொள்ள நான் எப்போதும் தயங்கியதில்லை -முதல்வர் ஸ்டாலின்


அப்போது பேசிய அவர், ‘நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மாணவர்களின் நலனை காத்தவர் எடப்பாடி பழனிசாமி. நீட் தேர்வு எதிர்ப்பில் இன்று வரை உறுதியாக உள்ளது அதிமுக. இதற்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது அதிமுக. தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அதிமுக நெஞ்சுரத்தோடு எதிர்க்கும் என்றார். 


மேலும், 1984 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது அதிமுக என சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பரமணியன், அது தவறான தகவல், நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது திமுக ஆட்சியில் என விளக்கமளித்தார்.   



இதனையடுத்து பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட்தேர்வு விவகாரத்தில் அதிமுக மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். நீட் தேர்வு என்ற வார்த்தை வருவதற்கு முதல் காரணம் யார்? எப்போது கொண்டுவரப்பட்டது என்பது மக்களுக்கு தெரியும் என குறிப்பிட்ட அவர், வரலாற்றை மறைத்து பேசமுடியாது எனத் தெரிவித்தார். நீட் தேர்வை (NEET Exam) ரத்து செய்ய திமுக எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என கூறினார்.


ALSO READ | NEET: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR