இந்திய மீனவரை தாங்கள் சுட்டுக் கொல்லவில்லை என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் சமிந்தா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ(22) என்பவர் கழுத்தில் குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். 


துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சென்னையில் உள்ள இலங்கை தூதரை வெளியேற்ற வேண்டும். மேலும் மத்திய அமைச்சர் வந்து சந்திக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி துப்பாக்கி சூட்டில் பலியான மீனவரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு ஏதும் நடத்தவில்லை என அந்நாட்டு கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் சமிந்தா கூறியுள்ளார்.


எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் எந்த மீனவர்களை சுடுவதற்கு இலங்கை கடற்படைக்கு உத்தரவிடவில்லை. எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் அதிகாரம் மட்டுமே இலங்கை கடற்படைக்கு அளிக்கப்பட்டுள்ளது சமிந்தா கூறியுள்ளார்.