சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும் என்பதும் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு இணையாக இந்த திருக்கல்யாண வைபவத்தில் பக்தர்கள் கூடி தரிசிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீநிவாச திருக்கல்யாணத்தை நடத்த முடிவு செய்தது.


மேலும் படிக்க | திருப்பதியில் முதியோருக்கு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி! 


இந்த நிலையில் சென்னை தீவு திடலில் இன்று ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாணத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


மேலும் 15 தீயணைப்பு வாகனங்கள், 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவக் குழுவினர் தயாராக உள்ளதாகவும் திருக்கல்யாண வைபவத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அவர்களுக்கு திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட லட்டு பிரசாதம், ஆப்பிள், தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்படும் என்றும் தமிழகத்திற்கான திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் ஆலோசனைக்குழுத் தலைவர் சேகர் ரெட்டி கூறினார்.  
சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் 14 ஆண்டுகளுக்கு பின் நடப்பது குறிப்பிடத்தக்கது


சென்னையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும் உள்ளதை அடுத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது பெறப்பட்டது.


மேலும் படிக்க | 300 ரூபாய் டிக்கெட் 3,000 ரூபாய்; பதறிய திருப்பதி தேவஸ்தானம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR