திருப்பதியில் முதியோருக்கு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதியில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 30, 2022, 10:43 AM IST
  • ஏப்ரல் 1 முதல் திருப்பதியில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி.
திருப்பதியில் முதியோருக்கு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி! title=

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக  2 ஆண்டுகளாக தரிசனங்கள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தற்போது சில மாதங்களுக்கு முன்பு தேவஸ்தானம் திறக்கப்பட்டு பொது மக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடைத்தது. 

கொரோனா தொற்றுக்கு முன்பு வரை முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் சிறப்பு நுழைவு வாயில் வழியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் படிக்க | வெறுப்பு, பகை குணம் இல்லாத '3' ராசிக்காரர்கள்..!!

அதன் பிறகு, தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான சிறப்பு நுழைவு தரிசனத்தை அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

Tirupathi

அதன்படி, திங்கள் முதல் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல், கோவிலின் தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசை வழியாக அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு தரிசனத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tirupathi

மேலும் படிக்க | ராசி மாறுகிறார் ராகு: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம், லாபம் பெருகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News