நள்ளிரவில் அதிர்ச்சி... ஸ்ரீரங்கம் கோவில் கோபுர சுவர் இடிந்து விழுந்தது
![நள்ளிரவில் அதிர்ச்சி... ஸ்ரீரங்கம் கோவில் கோபுர சுவர் இடிந்து விழுந்தது நள்ளிரவில் அதிர்ச்சி... ஸ்ரீரங்கம் கோவில் கோபுர சுவர் இடிந்து விழுந்தது](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2023/08/05/309449-aug5005.png?itok=pwSUmA1R)
Srirangam Temple Gopuram Wall:திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள சுவர் இன்று நள்ளிரவு 1.50 மணிக்கு இடிந்து விழுந்தது.
Srirangam Temple Gopuram Wall: தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில். இந்த கோவிலின் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை சுவர்கள் சில தினங்களாக விரிசல் ஏற்பட்ட நிலையில் காணப்பட்டது
108 வைணவ திரு தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகும். ஶ்ரீரங்கம் கோவிலுக்கு திருச்சி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்திலிருந்து குடும்பத்துடன் பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மேலும் படிக்க | ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்!
ஶ்ரீரங்கம் கோவிலில் தினசரி திருவிழா வைபவம் நடைபெற்று வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலில் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் கிழக்கு வாசலில் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் இரண்டாவது நிலை சுவர்கள், சில தினங்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டு இருந்தன. கோவில் நிர்வாகம் சார்பாக பராமரிப்பு பணிக்காக ஏற்கனவே இதற்கு டெண்டர் விடப்பட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விரிசல் அதிகமான நிலையில் முதல் நிலை கோபுரத்தின் சுவர் நள்ளிரவில் மளமளவென இடிந்து விழுந்து பெரும் சத்தம் ஏற்பட்டது. இன்று நள்ளிரவு 1.50 மணிக்கு இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் பொருட் சேதம் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கிழக்கு கோபுரம் இடிந்து விழுந்த சம்பவம் ஶ்ரீரங்கம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இடிந்த விழுந்த கிழக்கு கோபுர ஒரு பகுதியை முழுவதுமாக புதிதாக கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும் கோவில் நிர்வாகத்திற்க்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | குடியரசுத் தலைவரை வரவேற்க உன்னி செடியால் யானை உருவம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ