டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை வருகிற 16-12-2018 அன்று, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியாகாந்தி அம்மையார் அவர்கள் திறந்து வைக்கும் விழா நடைபெற உள்ளது. 


இந்நிலையில், சிலை திறப்பு விழாவிற்கு அகில இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் டெல்லி சென்று தேசிய தலைவர்களுக்கு நேரில் அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். 


முன்னதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களும் விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளுயாகியுள்ளது.  


இதை தொடர்ந்து, இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்த ஸ்டாலின், அவருக்கு அழைப்பிதழ் வழங்கினார். பின்னர் அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பிதல் வழங்கினார். ஸ்டாலின் உடன் சென்ற திமுக எம்.பி. கனிமொழி மற்றும் TR பாலு, ராஜா ஆக்கியோர் உடன் இருந்தனர்.