ஸ்டாலின் கல்லா பெட்டியைத்தான் திறக்கிறார்; சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு
ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு பொதுமக்களின் மனுக்களைப் பார்ப்பது கிடையாது. கல்லா பெட்டியைத்தான் திறக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு பொதுமக்களின் மனுக்களைப் பார்ப்பது கிடையாது. கல்லா பெட்டியைத்தான் திறக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்திட்டார் .
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயக்குமார் கூறியதாவது:
"எதிர்க்கட்சிகள் கேள்விக்கு ஜனநாயக ரீதியாக பதில் சொல்ல முடியாத அரசு தொடர்ந்து பொய் வழக்குகள் போடுகிறது. அதிமுக அடக்குமுறைக்கும் , சிறைக்கும் அஞ்சாது என்பதை ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். பூனை கண் மூடினால் உலகம் இருண்டுவிட்டதாக நினைத்துக் கொள்வதுபோல ஸ்டாலின் நடந்து கொள்கிறார்.
என்னுடைய கையெழுத்து இந்த அரசாங்கத்திற்கு ரொம்பவும் தேவையாக இருக்கிறது போல. அதனால்தான் வழக்குகளால் தினந்தோறும் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுகிறேன்.
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் காகிதப் பூக்கள் என ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளது அவருடைய அப்பாவை நினைவுபடுத்துகிறது. காகித ஓடம் , கடலலை மீது போவது போல , மூவரும் போவோம் என்ற வரிகளைப் போல ஸ்டாலின் துபாய் சென்றது இன்பச் சுற்றுலா, குடும்பச் சுற்றுலாதான். 6 மாதம் நடந்த கண்காட்சியில் இறுதி வாரத்தில் அரங்கு திறக்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின்தான்.
மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் 17,268 அரசுப் பேருந்துகள் இயக்கம்
ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு பொதுமக்களின் மனுக்களைப் பார்ப்பது கிடையாது. கல்லா பெட்டியைத்தான் திறக்கிறார். மனு பெட்டியைத் திறப்பதில்லை. சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. மக்களுக்கான பணிகளைச் செய்வதைவிட அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்பதே திமுகவின் ஒரே பணியாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கு காவல்துறை பயன்படுத்தப்படுவதால் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது
அரசு ஊழியர்களுக்குத் தேர்தல் வாக்குறுதியில் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார்கள். பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்களுக்குப் பட்டை நாமம் போட்டுள்ளனர் .
இனி வரும் நாட்களில் சொத்து வரி, பால் , மின்சார, பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவார்கள்.
சசிகலாவின் சுற்றுப்பயணத்தால் எந்தத் தாக்கமும் இருக்காது. இந்தியா சுதந்திர நாடு, யாரும் எங்கும் செல்லலலாம். எனவே சசிகலாவும் சுதந்திரப் பறவையாக எங்கு வேண்டுமானாலும் சுற்றலாம் "
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் படிக்க | 2 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டும் ‘குளுகுளு’ ஊட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G