2 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டும் ‘குளுகுளு’ ஊட்டி!

கோடை திருவிழாவை முன்னிட்டு நீலகிரியில் ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 28, 2022, 08:19 PM IST
  • 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதால் கோடை விழா ஏற்பாடுகள் தீவிரம்
  • தொட்டபெட்டா மலைப்பாதை திறப்பு - கண்காட்சியும் உருவாக்கம்
  • சுற்றுலாப் பயணிகளைக் கவர பல்வேறு ஏற்பாடுகளை செய்யும் நீலகிரி மாவட்டம்
2 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டும் ‘குளுகுளு’ ஊட்டி! title=

கோடைக்காலத்தில் வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க குளுகுளுனு எங்கயாவது போய்ட்டு வரலாம் என்று மக்கள் ஏங்கும்போதெல்லாம் சட்டென அவர்களின் நினைவில் அசராமல் வந்து நிற்பது ‘ஊட்டி’ என்ற குளுகுளு நகரம்.! மக்களின் இந்த எண்ணங்களுக்கு ஏற்ப, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள உதகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். உள்ளூர், தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மே மாத கோடைத் திருவிழாவுக்கு வந்துசெல்கின்றனர். கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலால் 2 ஆண்டுகள் நீலகிரியில் கோடை விழா ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது தொற்று குறைந்துள்ளதால் தடைக்கான அனைத்துக் கதவுகளும் திறக்கப்பட்டன. இதனால், இந்தாண்டு கோடைத் திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. 

Image Of Ooty

மேலும் படிக்க |பாரம்பரிய விழாவை நடனத்துடன் கொண்டாடிய தோடர் இன மக்கள்..! வீடியோ

அதன்படி, கோடைத் திருவிழா மே மாதம் முதல்வாரத்திலேயே தொடங்கிவிடுகிறது. மே மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 11வது காய்கறி கண்காட்சி நடைபெற இருக்கிறது. 13, 14, 15 ஆகிய தேதிகளில் 9வது வாசணை திரவிய கண்காட்சி கூடலூரில் நடைபெற இருக்கிறது. 17வது ரோஜா கண்காட்சி 14, 15 ஆகிய தேதிகளில் ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் நடைபெற இருக்கிறது. கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான 124வது மலர் கண்காட்சி 20, 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற இருக்கிறது. இந்த நாட்களில்தான் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து கண்ணைக் கவரும் மலர்களைக் கண்டு ரசித்துச்செல்வதுண்டு. அதன்பிறகு, 28, 29 ஆகிய தேதிகளில்  62வது பழ கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற இருக்கிறது. 

Image Of Ooty

மேலும் படிக்க |virtual flower showவாக மக்களைக் கவரும் 124வது ஊட்டி மலர் கண்காட்சி

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற இருக்கும் நீலகிரி கோடை விழாவிற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நீலகிரியில் தங்கியிருந்து கோடை விழா ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு வருகிறார். 

முதலில், கோடை விழாவுக்கு மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து நீலகிரி மாவட்டம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனை வலியுறுத்தி குன்னூரில் வனத்துறை சார்பில்  மஞ்சப்பை  மற்றும் சுற்றச்சூழல் விழிப்புணர்வு குறித்து மினி மார்த்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 8 கிலோ மீட்டர் என முன்று பிரிவுகளாக மாரத்தான் பந்தயங்கள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. 

மேலும் படிக்க | மருத்துவ வசதியற்ற கூடலூருக்கு மாவட்ட தலைமை மருத்துவமனையை மாற்ற வேண்டும்: சீமான்

மாரத்தான் ஓட்டத்துக்கு முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், அடுத்த ஆண்டு மார்ச் மாத்திக்குள் இரண்டரை லட்சம் மரக்கன்றுகள் நட உள்ளதாக தெரிவித்தார். பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை, அறநிலைத்துறை என அனைத்து துறையினரும் இணைந்து தமிழக முமுவதும் மரக்கன்றுகள் நடும் பணியினை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  சுற்றுச்சூழல் பணிகளுக்கு முக்கியத்தும் வந்த அதேநேரத்தில் பாதை சீரமைப்பு பணிகளிலும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கோடை விழாவுக்கு வரும் மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி ஊட்டிக்கு வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் செய்துவருகிறார். நெடுநாட்களாக சீரமைப்பு பணியில் இருந்த சாலைகள் கோடை விழாவுக்காக தயார் செய்யப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்க | காட்டுத்தீ...வெயில்...மிருகங்களின் தாகம்...! வனத்துறை சந்திக்கும் சவால்கள்

Image Of Ooty

தொட்டபெட்டா மலைச் சிகரம் 10 மாதங்களுக்குப் பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளது. தொட்டபெட்டா மலைச் சிகரம் செல்லும் சாலை மழையினால் சேதமடைந்து இருந்தது. அதனை சீரமைக்கும் பணி கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்தது. இதனால் உதகைக்கு சுற்றுலா வரும் பயணிகள் எல்லா இடங்களைச் சுற்றிப்பார்த்தாலும் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு மட்டும் போகமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். தற்போது சாலைப் பணிகள் முடிந்துள்ளதால் அதனை மக்கள் பயன்பாடுக்கு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்துவைத்தார். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இது உள்ளூர் மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. 

மேலும் படிக்க | Russian Invasion: உக்ரைன் ரஷ்யா மோதலின் எதிரொலியால் முடங்கும் நீலகிரி தேயிலை ஏற்றுமதி

சுற்றுலா வரும் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளைக் குறித்து தெரிந்துகொள்வதற்காக கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்த சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியையும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Image Of Ooty Show

இந்தக் கண்காட்சியில் பல்வேறு துறைகளை சார்ந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு ஏற்பாடுகளை செய்து வரும் நீலகிரி ‘பிஸி’யாக செயல்பட்டு வருகிறது. கோடை விழா வேறு நெருங்குகிறது. கொளுத்தும் வெயிலுக்கு ‘ஊட்டிக்குத்தான்’ ஒரு விசிட் அடிக்கலாமே.! 

மேலும் படிக்க | காற்றில் பறந்து கொரோனா விதிமுறைகள்; ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News