வாக்குப்பதிவுக்கான நேரத்தை மாற்றிய மாநில தேர்தல் ஆணையம்!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவுக்கான நேரத்தை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை: கொரோனா தொற்று சுழலைக் கருத்தில் கொண்டு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவுக்கான நேரத்தை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுக்குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 10 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக 9 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் விவரம் குறித்து அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த ஒன்பது மாவட்டங்களில் அதிகபட்சமாக 13,83,687 வாக்களர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளனர்.
9 மாவட்டங்களில் உள்ள இறுதி வாக்காளர்கள் நிலவரம்:
மொத்தம் வாக்காளர்கள் - 76,59,720
ஆண் வாக்காளர்கள் - 37,77,524
பெண் வாக்காளர்கள் - 38,81,361
மூன்றாம் பாலினத்தவர்கள் - 835
இன்னும் ஒருசில நாட்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR