பாரூர் ஏரி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!
போக விவசாயத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பாசனக் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவு பிரப்பித்துள்ளார்!
போக விவசாயத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பாசனக் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவு பிரப்பித்துள்ளார்!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பானையில் குறிப்பிட்டுள்ளதாவது., "கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அந்த வேண்டுகேள்களை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு பாரூர் பெரிய ஏரியிலிருந்து 2.7.2019 முதல் 13.11.2019 வரை மொத்தம் 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
பாரூர் பெரிய ஏரி நீரால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.