சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (எ) அமுக்கா ரமேஷ். சுமைத்தூக்கும் தொழிலாளியான இவர் நேற்று இரவு கொருக்குப்பேட்டை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ரமேஷை எதிரே வந்த மூன்று இளைஞர்கள் சேர்ந்து இரும்பு ராடு, கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். பின்னர் அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டதால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். 


அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதை கண்ட அந்த மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தகவலறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீஸார், ரமேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் படிக்க | செல்போன் தொலைந்து போனால் UPI விவரங்களை பாதுகாப்பது எப்படி


மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொருக்குப்பேட்டை பகுதியில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் உதயா என்பவருடைய தம்பியின் செல்போன் மாயமானதாக கூறப்படுகிறது. ரூ.27,000 மதிப்புள்ள அந்த செல்போனை ரமேஷ் திருடியதாக உதயா தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். 


இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. பின்னர் அங்கிருந்து  புறப்பட்டு வீட்டுக்கு சென்ற ரமேஷை உதயா, அரவிந்தன், முஹம்மது ரசூலுல்லா உள்ளிட்ட மூவர் வழிமறித்து பயங்க ஆயுதங்களால் தாக்கியதாக தெரிகிறது. இதில் ரமேஷ் உயிரிழந்த நிலையில் உதயா, அரவிந்தன், முஹம்மது ரசூலுல்லா ஆகிய மூவரையும் கைது செய்து ஆர்.கே.நகர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


செல்போன் திருடுபோன குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | டோனியின் திருட்டு போன செல்போன்கள் மீட்கப்பட்டது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR