Sterlite நிறுவனம் தமிழக மருத்துமனைகளுக்கு மருத்துவ உபகரண நன்கொடை அளித்தது
ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி நிறுவனம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கியது
சென்னை: வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராட தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
காயல்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் பிற COVID-19 தொடர்பான உபகரணங்களுடன் 30 படுக்கைகள் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கயல்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தலா 142 ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் மாடியின் புனரமைப்புப் பணிகளை ஸ்டெர்லைட் காப்பர் ஆலை (Sterlite Copper) மேற்கொண்டது. மேலும் அங்கு, 70 ஆக்ஸிஜன் படுக்கைகளையும் உருவாக்கியுள்ளது. தலா 7,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 75 ஜம்போ ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் அங்கு கொடுக்கப்பட்டது.
தென் தமிழக மாவட்டங்களில் மேல்நிலை தொட்டிகள், தீ ஏற்பட்டால் கண்டறிவதற்கான உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு சாதனங்கள் என பல்வேறு கூடுதல் உள்கட்டமைப்புகளை சுகாதார மையங்களில் ஸ்டெர்லை ஆலை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | PMK: 2021 - 2022ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR