Centre to SC: கருப்பு பூஞ்சைக்கான மருந்துக்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளுக்காக போர்க்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 27, 2021, 09:47 PM IST
  • கருப்பு பூஞ்சைக்கான மருந்துக்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
  • உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
  • உள்நாட்டு உற்பத்தி, இறக்குமதியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
Centre to SC: கருப்பு பூஞ்சைக்கான மருந்துக்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை title=

புதுடெல்லி: நாட்டில் COVID தொடர்பான கரும்பூஞ்சை (CAM) சிகிச்சைக்காக ஆம்போடெரிசின் போன்ற மருந்துகள் அல்லது கூடுதல் மற்றும் மாற்று மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம், உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று 375 பக்க பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

அதில், கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து கிடைப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற அமர்வின் கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்துள்ளது.

கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளுக்காக போர்க்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Also  Read | vaccination certificate: தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை எப்படி சேர்ப்பது?

ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் எல்-ஆம்போடெரிசின் பி (L-Amphotericin) மருந்தை உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அப்போது 5.525 லட்சம் யூனிட் ஊசி மருந்துகள் உற்பத்தியாகலாம் என்று எதிர்பார்ப்பதாகவும், மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றும் அரசு கூறுகிறது.  

ஆம்போடெரிசின் போன்ற மருந்துகளின் உள்நாட்டு உற்பத்தி வசதிகளை அதிகரிப்பதைத் தவிர, மருந்தின் நியாயமான பயன்பாடு குறித்த வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான வெளிப்படையான ஏற்பாடுகளை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களையும் செய்ய வேண்டும்.

ஆம்போடெரிசின் மருந்து உள்நாட்டு உற்பத்தி மூலமாகவும் இறக்குமதிகள் மூலமாகவும் கிடைக்கிறது. மேலும் இரு ஆதாரங்களும் அதிகரித்துள்ளன. 2021 மே மற்றும் ஜூன் மாதங்களில் முதன்முறையாகக் தேவை அதிகரித்து காணபட்டதாகவும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் வழங்கலை பன்மடங்கு அதிகரிக்கப்பட அரசு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

Also  Read | உலகின் பழமையான தமிழ் மொழியின் ரசிகன் நான்: பிரதமர் மோடி

மேலும், மாநிலங்கள் முழுவதும் விநியோகத்தை சமமாக செயல்படுத்தும் விதமாக, இதற்கான போர்ட்டலில் அறிக்கையிடப்பட்டுள்ள கருப்பு பூஞ்சை நோயாளியின் தரவை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உருவாக்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
 
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மூலப்பொருட்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உற்பத்தியாளர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

இது சம்பந்தமாக, வெளிநாடுகளில் உள்ள பல்வேறு உற்பத்தியாளர்களை அணுகுவதில் வெளிவிவகார அமைச்சகம் (MEA) முக்கிய பங்கு வகிக்கிறது.   உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி இரண்டையும் அதிகரிக்க பல முக்கியமான மற்றும் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Also  Read | Puducherry: புதுவை யூனியன் பிரதேசத்தில் 5 அமைச்சர்கள் பதவியேற்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News