தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் (Fishermen) ஈரானில் சிக்கித்தவித்த நிலையில், ஜூலை 1 ஆம் தேதி INS ஜலஷ்வா (INS Jalashwa) மூலம், இவர்களில் பலர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். கப்பலில் இடம் போதாததால் தமிழகத்தைச் சேர்ந்த 40 மீனவர்கள் அப்போது திரும்ப முடியாமல் போனது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலிருந்து, தமிழகத்தைச் சேர்ந்த 40 மீனவர்கள் உட்பட சுமார் 65 மீனவர்கள் தாங்கள் நாடு திரும்ப அரசாங்கம் ஏற்பாடுகள் செய்யக் காத்திருக்கிறார்கள்.


இந்நிலையில், ஈரானில் (Iran) இருக்கும் தமிழகத்தைச் (Tamil Nadu) சேர்ந்த 40 மீனவர்களை நாட்டிற்கு திருப்பி அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் (Chief Minister) கே.பழனிசாமி (K Palanisamy) வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை (S Jaishankar) கடிதம் எழுதி கேட்டுக்கொண்டார்.


ALSO READ: மீனவர்கள் தாயகம் திரும்ப வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை


தற்போது ஈரானில் சிக்கியிருக்கும் 40 மீனவர்களும் செவ்வாயன்று ஒரு சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்புவார்கள் என அறியப்படுகிறது.   


கன்னியாகுமரியைச் சேர்ந்த மரியா கில்டாஸ் ஈரானில் வேலைக்காக வீட்டை விட்டுச் சென்று 18 மாதங்கள் ஆகின்றன. திரும்பி வர விமானத்தில் இடம் கிடைக்காத நிலையில் அவர் அங்கேயே சிக்கிக்கொண்டார்.


ஈரானில் உள்ள ஒரு அறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 பேர், கேரளாவைச் சேர்ந்த 19 பேர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் 65 மீனவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.


முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் கருணை மற்றும் இரக்கத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு காத்திருப்பதாக சிக்கியுள்ளமீனவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.


நாகப்பட்டிணம், கடலூர், கன்னியாகுமரி உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஈரானில் தற்போது சிக்கியுள்ளனர். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், மீனவர்களை அழைத்துவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றும், அவர்கள் விரைவில் நாடு திரும்புவார்களென்றும் கூறியுள்ளார்.  


மும்பையைச் சார்ந்த ஒர் கப்பல் மற்றும் தளவாடங்கள் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்திய தூதரகத்துடனும் தெஹ்ரான் அதிகாரிகளுடனும் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனம், மீனவர்கள், இரண்டு பேருந்துகள் மூலம் தெஹ்ரானுக்கு சென்று கொண்டிருப்பதாகவும், அநேகமாக அவர்கள் செவ்வாய் மாலைக்குள் தில்லி சென்றடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.