ஆசிரியர் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாணவிகள் ஒரு ஆசிரியரின் புகைப்படத்தை எடுத்து கிண்டல் செய்யும் நோக்கில் செல்போன்களில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர். இதை பார்த்த ஆசிரியர்கள் ஸ்டேடஸ் வைத்துள்ள மாணவிகளை அழைத்து கண்டித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பருதியப்ப கோவிலை சேர்ந்தவர் கருணாநிதி இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் வித்யா வயது 17 இவர் ஒரத்தநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாணவிகள் ஒரு ஆசிரியரின் புகைப்படத்தை எடுத்து கிண்டல் செய்யும் நோக்கில் செல்போன்களில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர். இதை பார்த்த ஆசிரியர்கள் ஸ்டேடஸ் வைத்துள்ள மாணவிகளை அழைத்து கண்டித்துள்ளனர் அப்போது அந்த பள்ளியில் பார்க்கும் பள்ளியின் துணை முதல்வர் சசிகுமார் மாணவிகளை பொது தேர்வில் உங்கள் மதிப்பெண் குறைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
ALSO READ | வார்டன் தொல்லையா? மதமாற்றமா? லாவண்யாவின் புதிய வீடியோ
இதில் மனமுடைந்த வித்யா நேற்று இரவு வழக்கம் போல் தனது அறையில் படுக்க சென்றுள்ளார் இன்று காலை வித்யா நீண்ட நேரம் கதவு திறக்காமல் இருப்பதை பார்த்த குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
இதனால் அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே பார்த்தபோது வித்யா தூக்கில் தொங்கியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், அங்கு வித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். அவரது உடல் தஞ்சாவூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வித்தியாவின் சித்தப்பா சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பள்ளியின் துணை முதல்வர் சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ALSO READ | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR