கடந்த சில தினங்களுக்கு முன் சமூக ஊடகங்களிலும், செய்திகளிலும் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் கூட்ட நெரிசல் காரணமாக முந்தி அடித்துக் கொண்டு பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ வீடியோ வைரலாகியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்களின் உத்தரவுப்படி திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மாசிலாமணி அடங்கிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழு முதற் கட்டமாக இரண்டு பள்ளிகளுக்கும் நேரில் சென்று பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பள்ளி மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பான பயணம் குறித்து முதற்கட்ட ஆலோசனை  மேற்கொண்டனர். 


அதனடிப்பட்டையில் பள்ளி (TN Schools) தலைமை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், ஸ்ரீவைகுண்டம் போக்குவரத்து பணிமனை மேலாளர், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பாதுகாப்பாக பயணம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. பேருந்துகளில் தொங்கிச்செல்லும் சில குறும்புக்கார மாணவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து அவ்வாறு அது போன்ற செயல்களில் ஈடுபட்ட மாணவர்களின்
பள்ளிகளுக்கே நேரில் சென்று அறிவுரையும் எச்சரிக்கையும் செய்யப்பட்டது. 


மேலும் பள்ளி விடும் மாலை வேளைகளில் 03.50 மணியிலிருந்து 5.15 மணி வரை ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்தில் நாசரேத் வழியாக வந்த ஸ்ரீவைகுண்டம் மற்றும் 
திசையன்விளை பணிமனையை சார்ந்த, உடன்குடிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் ஆறு பேருந்துகள்  நிறுத்தப்பட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரைகள்
வழங்கி பள்ளி மாணவ, மாணவியர்கள் எக்காரணம் கொண்டும் படிக்கட்டில் தொங்கிய படியோ, பின்புறம் ஏணிப்படியில் நின்ற படியோ பயணம் செய்யாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டதுடன், அவ்வாறு கூறியும் செவிசாய்க்கவில்லை எனில் பேருந்தை இயக்ககூடாது என்றும் ஓட்டுநர் மற்றும்  நடத்துனர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.



ALSO READ:ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான குழந்தைகள் ஆணையத்தின் சம்மன் ரத்து இல்லை: நீதிமன்றம்


மேலும் பேருந்து நிறுத்தத்தில் இரு பள்ளிகளிலிருந்தும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு, பேருந்து நிறுத்தத்திலேயே பொறுப்புகள் வழங்கப்பட்டு, அங்கு வரும் மாணவர்கள் படிக்கட்டில் நின்று பயணம் செய்யாமல் அவர்களை பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏற்றிக்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டது. மொத்தமாக ஆறு பேருந்துகளில் ஸ்ரீவைகுண்டம் பணிமனை சார்ந்த ஒரு பேருந்தும் திசையன்விளை பணிமனையை சார்ந்த ஒரு பேருந்தும் என இரண்டு பேருந்துகள் மட்டும் வேகப் பேருந்துகள் என அழைக்கப்பட்டு நாசரேத் முதல் திருநெல்வேலி வரை செல்லும் போது புறவழிச் சாலை வழியாக ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. பெரும்பாலான மாணவ மாணவியர்கள் அந்த இரண்டு பேருந்துகளில் ஏற முடியாமல் இருந்தனர். 



உடனடியாக சம்பந்தப்பட்ட பணிமனை மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மேற்கண்ட இரண்டு பேருந்துகளும் பள்ளி முடிவடையும் நேரங்களில் மட்டும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் சென்று வருமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டின் தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஸ்ரீவைகுண்டம், திசையன்விளை பணிமனை மேலாளர்கள், இரு பள்ளிகளைச் சார்ந்த உடற்பயிற்சி ஆசிரியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் இவர்கள் அனைவரும் சேர்ந்த வாட்ஸ் அப்குருப் ஒன்றை உருவாக்கி, மேற்கண்ட செயல்களை கண்காணிக்க 
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


நாசரேத் காவல்நிலைய (TN Police) ஆய்வாளர்  அவர்களின் உதவியும் நாடப்பட்டு அவர்களையும் மேற்கண்ட வாட்ஸ்அப் குரூப்பில் இணைத்து, வருங்காலங்களில் இதுபோன்ற படிக்கட்டு பயணம் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள்  வகுப்பு முடியும் நேரமும் பேருந்துகளின் இயக்க நேரமும் ஒரே நேரமாக
மாற்றி அனைத்து பேருந்துகளிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்லும் வகையில் பேருந்து நேரத்தினை பணிமனை மேலாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணைந்து மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. 


மேலும், இரு பள்ளிகளிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு பேருந்துகளை பயன்படுத்தும் மாணவ, மாணவியர்களின் புள்ளி விபரங்களை கணக்கெடுத்து, இவை பணிமனை மேலாளருக்கு வழங்கப்பட்டு, அதற்கு தகுந்தாற் போல் பேருந்துகளை இயக்கிட பணிமனை மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின் காரணமாக  வருங்காலங்களில் படிக்கட்டில் பயணம் செய்வதோ, பேருந்தின் ஏணிபடியில் நின்று பயணம் செய்வதோ 
தவிர்க்கப்பட்டும் என்பதால் மாணவ, மாணவியர்களும் அவர்களது பெற்றோர்களும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட்ட அரசு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.


ALSO READ: மரணத்தில் சந்தேகம்.. சிபிசிஐடி விசாரணை வேண்டும்.. உறவினர்கள் சாலை மறியல்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR