ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும்-சுப்பிரமணியன் சுவாமி
பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என ஆறு காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இதற்கு முன்பு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுருந்தார் சுப்பிரமணியன் சுவாமி அதில் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கிறார், எனவே ரிசர்வ்
வங்கி ஆளுநர் பொறுப்பில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்ருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இன்று 2-வது முறையாக பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி வீழ்ச்சி அடைய ரகுராம் ராஜனே பொறுப்பு என்றும், நாட்டின்
உயரிய பதவியில் இருந்து தனது அமெரிக்கா கிரீன் கார்டை புதுப்பித்துக் கொள்ள அடிக்கடி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார் என்றும் அமெரிக்காவின் நலன் சார்ந்தே நமது பொருளாதாரத்தை
கொண்டு செல்கிறார் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரகுராம் ராஜன் பதவி காலம் இந்த வருடம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதற்கிடையில் சுப்பிரமணியன் சுவாமியின் கடிதம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி பேசுகையில்:- ரிசர்வ் வங்கி ஆளுநராக விமர்சிப்பது என்பது இதுவரை நிகழ்ந்ததில்லை. இந்த விவகாரத்தில் மோடி அவர்கள் மவுனம்
சாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்திகிறது எனக் கூறியிருந்தார்.
சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியை ரகுராம் ராஜன் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். எந்த விதமான சந்திப்பு என்று அதிகாரபூர்வமான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.