பெண் காவலரின் தொடர் கொலை மிரட்டல்: தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த நபர்
மனு கொடுத்தும் பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் கண் முன்னரே மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண் காவலரின் தொடர் கொலை மிரட்டலால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மனிதரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம்: திருப்பத்தூரை அடுத்த கொரட்டி குமாரம்பட்டு பகுதியை சேர்ந்த தயாளன் என்பவரின் மகன் மேகநாதன். இவருக்கு வயது 35. மேகநாதன் குடும்பத்தில் உள்ள 5 உறவினர்களுக்கு சுமார் 20 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது.
அதே பகுதியை சேர்ந்தவர் சுர்ஷ். இவரது மனைவி 43 வயதான பூங்கோதை ஓசூர் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக (TN Police) பணிபுரிந்து வருகிறார்.
மேகநாதன் குடும்பத்தினரின் 20 ஏக்கர் நிலத்தின் அருகே பூங்கோதைக்கு சுமார் ஒரு ஏக்கர் அளவிலான விவாசயம் நிலம் இருந்துள்ளது. அதனை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அவர் விற்றுவிட்டார்.
இந்த ஐந்து குடும்பங்களும் பரம்பரை பரம்பரையாக இந்த வழியை தான் பயன்படுத்தி வந்துள்ளனர். திடீரென, இந்த பொது வழியை பயன்படுத்தக்கூடாது, நான் மற்றவருக்கு விட்டு விட்டேன் எனக் கூறி சுமார் ஐந்து குடும்பத்தாரிடம் பூங்கோதை மிரட்டும் பாணியில் பேசி உள்ளார். அதுமட்டுமின்றி, காவலர் என்ற காரணத்தால் மேகநாதனை பூங்கோதை சரமாரியாக தாக்கியும் உள்ளார்.
ALSO READ | கெமிக்கல் நிறுவனத்தில் குளோரின் வாயு கசிவு - ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி
இதன் காரணமாக பூங்கோதை மீது நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மேலும் பல வருட காலம் பயன்படுத்திய போது வழியை மீட்க கோரியும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர்.
இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த மேகநாதன் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா கண் முன்னே தற்கொலைக்கு (Suicide Attempt) முயன்றார்.
பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி கீழே எரிந்து மேகநாதனை திருப்பத்தூர் காவல் நகர நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பலமுறை மனு கொடுத்தும் பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் கண் முன்னரே மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR