தமிழகத்தில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் குறையும்!
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்று முதல் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்று முதல் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. அதன் தொடர்ச்சியாக கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் கோரத்தாண்டவம் அதிகமாக இருந்தது. அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றும் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், சென்னையிலும் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஈரோடு பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.