தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய நிலவரப்படி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 158 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 76 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் அடிப்படையில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்  என்பது உறுதியாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின் திமுக ஆட்சி மலர உள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


ALSO READ | TN Election Results: எடப்பாடி பழனிச்சாமி அமோக வெற்றி


மேலும், ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில் திறம்பட அயராது அழைத்து வெற்றி அடைந்திருக்கும் என் அன்பு நண்பர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் புகழ் பெற வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



ALSO READ | திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR